கருணாநிதி பேனா நினைவு சின்னம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் – பொதுப்பணித்துறை

முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கடலுக்கு நடுவில் அமைக்கப்படவுள்ள பேனா நினைவு சின்ன கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என பொதுப்பணித்துறை அறிவிப்பு. 

முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் ரூ.81 கோடியில் அமைகிறது. இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னத்தில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், மூன்று மாதங்களில் நினைவுச்சின்ன கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பனிடத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், நினைவு சின்னத்தை வடிவமைக்க சென்னை ஐஐடி மற்றும் பிற நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்றும், அனுமதி கிடைத்துள்ள நிலையில் டெண்டர் விடும் பணி நடைபெற்று வருவதாகவும்,கண்ணாடி பாலம் வழியாக கடல் மேல் மக்கள் சென்று பேனா நினைவுச் செலுத்தி பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பின்பகுதியில் பெரிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.