#JustNow: கூடுதல் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்து, வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் திட்டமிட்டபடி, தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Leave a Comment