வேலை வாய்ப்பிற்காக காத்திருப்போர் பட்டியல் – தமிழ்நாடு அரசு வெளியீடு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள் சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் 76 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், 2022-04-30 வரை வேலை வாய்ப்பிற்காக பதிவுதாரர்களது விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு வேலைக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் ஆண்கள் 35,67,000 பேர், பெண்கள் 40,67,820 பேர், மூன்றாம் பாலினம் 239 பேர் என மொத்தம் 76,35,059 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் வயது வாரியான விவரங்களும் வெளியாகியுள்ளது.

 

Leave a Comment