JEE மெயின் 2021 தேர்வு தேதி அறிவிப்பு..! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு தேதிகள்:

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் ஜனவரி 15 தேதி வரை விண்ணப்பிக்கலாம். அடுத்தாண்டு ஜேஇஇ மெயின் தேர்வு நான்கு முறை நடைபெறும். முதல் தேர்வு பிப்ரவரி 22 முதல் 25, 2021 வரை நடைபெறும், அடுத்த மூன்று தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2021 ஆகிய தேதிகளில் நடைபெறும். இது மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படலாம்.

JEE மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும். தேர்வின் முதல் ஷிப்ட் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாவது ஷிப்ட் ஷிப்ட் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://jeemain.nta.nic.in/ இல் பதிவு செய்ய வேண்டும். அறிவிப்பு மற்றும் விண்ணப்ப தேதிகளின் முழு விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளன.

13 மொழிகளில் தேர்வு:

ஜே.இ.இ மெயின் தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும்.

தேர்வர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 30 கேள்விகள் கேட்கப்படும். அவை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பிரிவு A இல் 20 கேள்விகள் மற்றும் பிரிவு B க்கு 10 கேள்விகள் இருக்கும். பிரிவு B இல் உள்ள 10 கேள்விகளில், ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். மொத்த கேள்விகளின் எண்ணிக்கை  (இயற்பியல் – 25, வேதியியல் – 25 மற்றும் கணிதம் – 25) இருக்கும்.