SLIM: நிலவை நோக்கி பயணம்! வெற்றிகரமாக ‘ஸ்லிம்’ விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது ஜப்பான்!

இந்தியாவைத் தொடந்து நிலவை ஆராய்வதற்காக, ஜப்பான் நாடு “ஸ்லிம்” (SLIM) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது. முன்னதாகவே, இந்த ஸ்லிம்  விண்கலத்தை விண்ணில் அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 3 முறை விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

தற்பொழுது, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஏவிய “ஸ்லிம்” (SLIM) விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், ‘ஸ்லிம்’ விண்கலம் அடுத்த 4 அல்லது 6 மாதத்தில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SLIM விண்கலம் ஏவப்பட்ட 47 நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. விண்ணுக்கு சென்ற பின், எவ்வாறு சந்திரயான் -3 விண்கலத்தின் சுற்றுப்பாதையை உயர்த்தும், குறைக்கும் பணிகள் இங்கும் அடுத்த சில நாட்களில் நடைபெற இருக்கிறது.

நிலவில் தரையிறங்க ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானிய தனியார் நிறுவனம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.