அவதார் -7ஆம் பாகங்களுக்கான கதை ரெடி – ஜேம்ஸ் கேமரூன்.!

அவதார் 3வது பாகமே இன்னும் திரையரங்குகளில் வரவில்லை, ஆனால் ஜேம்ஸ் கேமரூன், அவதார் உரிமையில் ஆறாவது மற்றும் ஏழாவது படங்களுக்கான திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

அவதார் திரைப்படம் மொத்தமாக 5 பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, ‘அவதார் 3’ டிசம்பர் 19, 2025 க்கும், ‘அவதார் 4’ டிசம்பர் 21, 2029 க்கும், ‘அவதார் 5’ டிசம்பர் 19, 2031 ஆண்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘அவதார்’ படத்தின் 6 மற்றும் 7வது பாகத்திற்கான கதைகளை எழுத உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். 2009-ல் வெளியான ‘அவதார்’ முதல் பாகம், உலகளவில் வெற்றியைப் பெற்றது.

நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!

அடுத்து, ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ எனும் 2வது பாகமும் வெளியானது. இப்படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன், ‘அவதார்’ படத்தின் 5-வது பாகம் வரை கதையை எழுதிவிட்டேன். அடுத்த 2 பாகங்களுக்கான கதைக்கரு கிடைத்துள்ளதாக கூறினார். ஆனால், அப்படி அவர் 7 பாகங்களை கொண்டு வந்தாலும், அதை பார்ப்பதற்கு காலங்கள் கடந்தோடி விடும் போல் தெரிகிறது.

Leave a Comment