இளைஞர்களுக்கு ஜாக்பாட்..! படித்த வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை..!

சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும்.

சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்த முதல்வர் பூபேஷ் பாகேல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள 18 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித்தொகையை மாநில அரசு வழங்கும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் “படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்தில் எந்த நாளில் விண்ணப்பித்தாலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்துள்ளார்.

Leave a Comment