இது பொன் விழா அல்ல , பெண் விழா – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதன்முதலாக பெண்களை காவலராக உருவாக்கி அவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்தார் கருணாநிதி என முதல்வர் பேச்சு. 

சென்னையில், நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார். மேலும், ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கிவைத்தார்.

முதல்வர் உரை 

இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல் படையில் பெண்கள் இணைக்கப்பட்டனர். முதன்முதலாக பெண்களை காவலராக உருவாக்கி அவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்தார் கருணாநிதி. இது பொன்விழா அல்ல பெண்விழா.

எனது பாதுகாப்புக்காக பெண் காவலர்களை நிற்கவைக்க வேண்டாம் என உத்தரவிட்டேன். காவலர்களின் வீர செயல்களை பார்த்து வியந்தேன். தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும், 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

பெண் காவலர்கள் காவல் பணியோடு, குடும்பப் பணியையும் சேர்த்து பார்த்து வருகின்றனர்.  ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். மேலும் பெண் காவலர்களுக்காக 9 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment