அஜித் படத்தில் கிடைத்த வாய்ப்பு! அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெஜினா?

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். படத்தில் அர்ஜுன், ரெஜினா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான தலைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இன்னும் படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகவில்லை. இதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

ரஜினிக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி!

மேலும், இந்த படத்தில் ரெஜினா எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிகை ரெஜினா அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அர்ஜுன் இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார்.

எனவே, அவரை போலவே அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ரெஜினாவும் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த ரெஜினாவுக்கு விடாமுயற்சி படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதால் இந்த படத்தின் மூலம் நல்ல கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது.