இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.!

அக்டோபர் மாதம் 6ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர் . ஹமாஸ் அமைப்பினர் நடத்திய முதற்கட்ட தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பிணை கைதிகளாக பலர் கடத்தி செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 16 பேர் பலி, 300 பேர் காயம்..!

ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய போரில் காசா நகரில் இதுவரை 21,110 பேர் உயிரிழந்ததாக காசா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழந்தோர் பெரும்பாலானோர் காசா நகரத்து பொதுமக்கள் . அதிலும் பெரும்பாலானோர் பெண்கள், வயதானோர், குழந்தைகள் ஆவர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேர் உயிரிழந்ததாக காசா நகரத்து சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 55,243 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.