கோவிலுக்கு செல்லும்போது இதனால் தான் கருப்பு உடை அணிய கூடாதா?..

இறைவனை நாம் வழிபடும் போது உடுத்தும் உடைகளுக்கு பல கட்டுப்பாடுகள் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குச் செல்லும்போதும் நம் வீட்டில் பூஜை செய்யும்போதும் கருப்பு உடை ஏன் அணிய கூடாது என்று பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும்.

வெள்ளை நிறம் துறவிகளுக்கான நிறமாகவும், காவி நிறம் சன்னியாசிகளுக்கு உரிய நிறமாகவும்  மஞ்சள் மற்றும் சிகப்பு நிறம் மங்களகரமான நிறமாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. இதில் கருப்பு நிறம் சிலருக்கு அதிகம்  விரும்புவர்கள் ஆகவும் ஒரு சிலர் அதை விரும்பாதவர்களாகவும் உள்ளனர். இந்த கருப்பு உடையை மரணத்திற்கு செல்லும்போதும் ஏதேனும் எதிர்ப்பை தெரிவிக்கவும் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

கருப்பு உடை தவிர்ப்பது ஏன்

பொதுவாக அனைவரும் கருப்பு உடை பற்றி கூறுவது குலதெய்வத்திற்கு ஆகாது என்றுதான், அது மட்டும் அல்லாமல் சுப நிகழ்ச்சிகளுக்கும் மங்களகரமான நிகழ்வுகளுக்கும் துணிகள் எடுக்கும் போதும் கருப்பு நிற உடை மறுக்கப்படுகிறது. இந்த கருப்பு உடை நீண்ட காலமாக கருப்பு நிறம் ஆகாது என நம் சமூகத்தில் சொல்லிச் சொல்லி அந்த எண்ணம் விதைக்கப்பட்டுள்ளது. அதனாலயே அதை பார்க்கும்போது பலருக்கும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது அப்படி தோன்றுவதால்,ஒரு விதமான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதாலும், அடர் நிற உடைகளை அணிந்து சென்றால் சூரிய வெப்பத்தை உள்வாங்கி நம் உடலுக்கு அதிக வெக்கையை  கொடுக்கும் என்பதாலும், கருப்பு நிறம் சனி பகவானுக்குஉரியது  என்பதால் சனீஸ்வரன் மேல் உள்ள பயத்தால் ஒரு சிலர் கருப்பு நிற உடையை பயன்படுத்துவதில்லை.

ஐயப்ப பக்தர்களும் கருப்பு நிறமும்

ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும்போது மட்டும் ஏன் கருப்பு நிற உடைய அணிகிறார்கள் என்று எண்ணம் பலருக்கும் தோன்றும். அது ஏனென்றால், கோவிலுக்கு காட்டு வழியில் செல்ல வேண்டும் என்பதால் காட்டு வழியில் செல்லும்போது மிருகங்களிடம் இருந்து தப்பிக்கவும், காட்டின் சூழல் இருட்டு அந்த இருட்டின் நிறம் கருப்பு , கருப்பு நிறத்தில் உடை உள்ளது என்றால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் கருப்பு உடை பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே இறைவனை வழிபடும் போதும் நம் வீட்டில் பூஜை செய்யும் போதும் ஆடைகளிலும் நம் எண்ணத்திலும் சாந்தம் இருக்க வேண்டும். அதற்கு நிறம் நமக்கு துணை புரிகின்றது என்பதால் நமக்கு பெரியோர்கள் கூறுகின்றனர் எனவே கோவிலுக்கு செல்லும்போது ரம்யமான நிறங்களை உடுத்திக் கொண்டு நம்மை பார்ப்போருக்கு நல்ல ஆற்றலையும் கொடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.