சகுனம் பார்ப்பது சரியா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

சகுனம் என்பது ஒரு முன் அறிகுறி ஆகும், இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது இதை ஒரு சிலர் மூடநம்பிக்கை என்றும் கூறுவர். சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என உள்ளது இவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் முன்னோர்கள் , குலதெய்வங்கள் ,தேவதைகள் என,   நல்ல சக்திகள் நமக்கு நடக்கவிருக்கும் தீயவற்றை முன்கூட்டியே உணர்த்தக்கூடியது சகுனம். அதாவது ஒரு ஒரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் விபத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி அதை காலதாமதம் ஆக்குகிறது.

நல்ல சகுனம் எது? கெட்ட சகுனம் எது?

சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அந்தந்த நேரத்தில் மாறுபடும். நீங்கள் செய்யக்கூடிய காரியம் மற்றும் மன அதிர்வலைகளை பொறுத்தே அமையும். அதாவது ஒவ்வொருவரும் அந்த நேரத்தில் ஈடுபடக்கூடிய காரியத்தையும் நடக்கக்கூடிய சூழ்நிலைகளையும் பொறுத்து நல்ல சகுனமா, கெட்ட சகுனமா என எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக ஒருவர் வீட்டில் ஹோமம் நடந்து முடிந்து, பிறகு மழை வருகிறது என்றால் அது அந்த வீட்டின் நபருக்கு நல்ல சகுனம்.அதுவே அந்த மழை வரும் நேரத்தில் வெளியில் உப்பு விற்கின்றவருக்கும் ,இளநீர் வியாபாரிக்கும்  அது  கெட்ட சகுனம்  தான். இப்படி ஒவ்வொருவரும் செய்யும் செயல்பாட்டிற்கும் சூழ்நிலைகளுக்கும் பொறுத்தே நல்ல சகுனம், கெட்ட சகுனம்  என்பது நிர்ணயிக்கப்படும்.

சனியால் அவதிபடுவருக்கு  காக்கா எச்சமிட்டால் நம்மை பிடித்த சனி விலகியது  என்று நினைப்பார்கள்  இது நல்லசகுனம்  என கூறுவார் .இதுவே ஒருவர் வேலை நிமித்தம்    நேர்காணலுக்கு செல்லும் போது  சட்டையில் எச்சம் விழுந்தால் வேலை போய்விடும் இது அவருக்கு கெட்ட  சகுனம் , இப்படி ஒவ்வொருவருக்கும் மாறுபடும்,எனவே குறிப்பிட்டு இது நல்ல சகுனம் இது கெட்ட சகுனம் என கூறிவிட முடியாது .

ஆகவே நாம் வெளியில் செல்லும்போது நமக்குப் பிடித்தவர்களை பார்த்தால் நம் மனம் மகிழ்ச்சி அடையும் இந்த மனம் உணரும் தன்மையைப் பொறுத்து சகுனத்தை நல்லதா.. கெட்டதா என கணக்கிட்டு அதை நமக்குப் பிடித்த மாதிரி சுப சகுனங்களாக உருவாக்கிக் கொண்டு அவரவர் வேலையில் கவனம் செலுத்தி உழைத்தால் வெற்றி பெறலாம்.

Leave a Comment