அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல்…மறுப்பு தெரிவித்த ஈரான்..!

ஜோர்டானில் சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸா போர் தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் காயமடைந்ததற்கும் அமெரிக்கா பதிலளிக்கும் என்று கூறினார். மேலும், தாக்குதலுக்கு காரணமான குழுவை அமெரிக்க அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

ரஸ்யா தாக்குதல்… மூன்றாம் உலகப்போர்… உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்.!

சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களால் இது நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும் என கூறினார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன்  பழிவாங்குவதாக உறுதியளித்ததை எடுத்து சிரியாவின் எல்லைக்கு அருகே உள்ள ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற ஈரானின் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி கூறுகையில்” சில அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் ஆக்கப்பூர்வமற்ற ஆதாரங்கள் சர்வதேச அமைதியை கேடுக்கும் வகையில் இருப்பதாக கூறினார். முன்னர் தெளிவாகக் கூறியது போல், இப்பகுதியில் உள்ள குழுக்கள் சியோனிச குழுக்களும் மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர்கள் ஈரான் அரசின் உத்தரவின் பெயரில் இயங்கவில்லை. அமெரிக்கத் தளத்தின் மீதான தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.

 

Leave a Comment