IPL LSG vs GT: குஜராத் அணி மந்தமான பேட்டிங்; லக்னோ அணிக்கு 136 ரன்கள் இலக்கு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs GT போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி 135/6ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் சஹா இன்னிங்சை தொடங்கினர். சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி முதல் விக்கெட்டாக வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்டிக், நிதானமாக ஆடி ரன்கள் குவித்து வந்தார்.

சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த சஹா(47) ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் க்ருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹர்டிக்(66 ரன்கள்) அரைசதம் அடித்து அசத்தினார். முடிவில் குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.

Leave a Comment