INDvsNZ ODI: 40 ஓவர்களில் நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழந்து 247 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷுப்மன் கில் உதவியுடன் 349 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 208 ரன்கள் குவித்தார்.

350 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது. தொடக்க வீரர்களான டெவான் கான்வே (10 ரன்கள்), மற்றும் ஃபின் ஆலன்(40 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்தவர்களில் கேப்டன் டாம் லேதம் 24 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

அடுத்து களமிறங்கிய மிட்சேல் சாண்ட்னருடன்(33 ரன்கள்), சேர்ந்த மைக்கேல் ப்ராஸ்வெல்(89 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். இருவரும் நிதானமாக விளையாடி 116 ரன்கள் குவித்திருக்கின்றனர். 40 ஓவர்கள் வரை அந்த அணி, 6 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து வெற்றிபெற இன்னும் 10 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா சார்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

Leave a Comment