தூய்மையான நகரங்கள் பட்டியலில் 7வது ஆண்டாக இந்தூர் முதலிடம்!

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், இந்தூர் மற்றும் சூரத் ஆகியவை இந்தியாவின் முதல் தூய்மையான நகரங்களாக அறிவித்துள்ளது.

கடந்த 2016 முதல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய மிகப்பெரிய உலகளாவிய கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்ஷனை நடத்தி வருகிறது. இதன் மூலம், தூய்மையான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதில் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்று (ஜனவரி 11) மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடாந்திர ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023ன் கீழ், தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக, இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது .

இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவை ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில்’ ஒன்றாகவும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சங்கராச்சாரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்!

இன்று நடைபெற்ற இந்த விருது விழாவில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் செயலாளர் மனோஜ் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.