இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ..! நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!

இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோவை பிரதமர் மோடி ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கேரளா: இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையின் தொடக்க நிகழ்வு வரும் ஏப்ரல் 25ம் தேதி அதாவது நாளை மறுநாள் திருவனந்தபுரத்தில் நடைபெறும். இந்த வாட்டர் மெட்ரோ ரூ.1,136.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இது அம்மாநிலத்தின் கனவுத் திட்டம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். தென் மாநிலத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு உற்சாகமான காலம் வரவுள்ளதாக முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர், உலகத்தரம் வாய்ந்த கொச்சி வாட்டர் மெட்ரோ தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது. இது கேரளாவின் கனவுத் திட்டம், இத்திட்டம் கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். 78 மின்சார படகுகளுடன், 38 டெர்மினல்கள் ரூ.1,136.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. எங்கள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு உற்சாகமான காலம் காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த புதிய திட்டம் கொச்சி பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். வாட்டர் மெட்ரோ என்பது ஒரு தனித்துவமான நகர்ப்புற வெகுஜன போக்குவரத்து அமைப்பாகும். இது வழக்கமான மெட்ரோ அமைப்பைப் போலவே அதே அனுபவம் மற்றும் பயணத்தை எளிதாக்குகிறது. கொச்சி போன்ற நகரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Leave a Comment