IND vs AFG: கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..!

இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு முதல் போட்டியிலும் இரண்டாவது போட்டியிலும் சிவம் துபே அசத்தலாக விளையாடினார்.

இந்த நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித்

இந்தியா 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான்

ஆப்கானிஸ்தான் 

ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான்(கேப்டன்), குல்பாடின் நயிப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லாஹ் சத்ரான், கரீம் ஜனத், ஷரபுதீன் அஷ்ரஃப், கைஸ் அகமது, முகமது சலீம் சஃபி, ஃபரீத் அஹ்மத் மாலிக்

இந்திய அணியை பொறுத்தவரையில், அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்க பட்டு சஞ்சு சாம்சன் அவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.