மோசமான ஓட்டுனர்கள் இந்தியா.! சிறந்த ஓட்டுநர்கள் ஜப்பான்.! வெளியான அதிர்ச்சி சர்வே.!

உலகில் மோசமான ஓட்டுனர்களை பெற்ற நாடுகளில் இந்தியா 4ஆம் இடம் பெற்றுள்ளது. 

உலகளாவிய மக்கள் தொகை பெருக்கத்தினால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதனால் சாலை போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக மெட்ரோ நகரங்களுக்கு மக்களின் நகர்வு அந்த நகரத்தின் போக்குவாரத்தை வெகுவாக பாதிக்கிறது. இதனை குறிப்பிட்டு பொது போக்குவரத்தை பயன்படுத்த அரசு பரிந்துரைத்து வருகிறது.

இந்தியா : அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று உலகளாவிய பொது போக்குவரத்து பற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மோசமான ஓட்டுனர்களை பெற்ற நாடுகள் , அதே போல உலகில் நல்ல ஓட்டுனர்களை பெற்ற நாடுகள். இந்த சர்வே ரிப்போர்ட் ஆனது ஓட்டுனரின் தரத்தை மட்டும் வைத்து எடுக்கப்படவில்லையாம்.

தாய்லாந்து முதலிடத்தில் : ஓட்டுநர் தரம், நாட்டில் உள்ள சாலை வசதிகள், போக்குவரத்துக்கு விழிப்புணர்வு  உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்த சர்வே ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளது . இதில் உலகில் மோசமான ஓட்டுனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 4 வது இடத்தை பெற்றுளளது.

முதலிடத்தில் ஜப்பான் : முதலிடத்தில் தாய்லாந்து நாடு இடம்பெற்றுள்ளது. லெபனான், பெரு ஆகிய நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். அதே போல உலகில் சிறந்த ஓட்டுனர்களை பெற்றுள்ள நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.

Leave a Comment