இந்தியா

மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக இருக்கும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 3 தேதி குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையில், “2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வருங்கால நிதிகளுக்கு 7.1 என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்றும் ஜூலை 1 , 2024 முதல்  செப்டம்பர் 30, 2024 வரை இந்த விகிதம் அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டிலும்இதே வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த முறை வட்டி விகிதத்தில் ஏந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

இதனை, பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) மற்றும் இந்திய ஆயுதத் துறை வருங்கால வைப்பு நிதி (ஐஓஎஃப்எஸ்) ஆகியவற்றிக்கு ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.1 சதவீத வட்டி விகிதங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு மாற்றாமல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) 8.2 சதவீதமாகவும், தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

கூகுள் மேப்பால் ஜாமீனில் வந்தவருக்கு சிக்கல்.? உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில்…

7 mins ago

‘எப்போதெல்லாம் ரன் தேவையோ .. அவரோட பேட் தான் கேட்பேன்’ ! சதம் அடித்த பின் அபிஷேக் பேட்டி!

அபிஷேக் சர்மா : நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 46 பந்துக்கு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த போட்டி முடிந்த பிறகு…

18 mins ago

வார தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்கம் விலை.!

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி…

29 mins ago

சாதனையுடன் ஜூலை 12ம் தேதி NETFLIX-ல் வருகிறார் மகாராஜா.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான "மகாராஜா" திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும்…

39 mins ago

கேம்சேஞ்சர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் மெயின்..அப்போ ராம்சரண்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷங்கர்!!

கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும்,  ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன்…

41 mins ago

எனது ஒற்றுமை யாத்திரைக்கு அவர்தான் காரணம்.. ராகுல் காந்தி உருக்கமான வீடியோ.!

ஆந்திர பிரதேசம்: நான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரைக்கு மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தான் காரணம் என ராகுல் காந்தி வீடியோ மூலம்…

57 mins ago