அபாரதத்திற்கு பயந்து கடைசி சில மணி நேரத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் பேர் வருமானவரி தாக்கல்.!

நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை தாக்கல் செய்தனர். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 31 வரையில் அந்த ஒரு வருட வருமான வரித்துறை செலுத்துபவர்களின் கணக்குகள் முடிந்த்துவிடும். அந்த கணக்கு வரவு செலவு விவரங்களை ஜூலை 31க்குள் வருமான வரி செலுத்துவோர் தக்கல் செய்துவிட வேண்டும்.

காலக்கெடுவை மீறினால், அபராதம் விதிக்கப்படும். அதனால், அதனை தவிர்க்கவே, கடைசி நாளில் லட்சகணக்கானோர் தாக்கல் செய்தனர், அதிலும், கடைசி சில மணிநேரங்களில், மட்டும் 14 லட்சம் பேர் தாக்கல் செய்து இருந்தனர்.

அதனை ஒவ்வொரு மணிநேரமும், வருமான வரித்துறை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இரவு ஏழு முதல் எட்டு மணி வரையில் 4,95,505 பேர் தாக்கல் செய்தனர்.

9 மணி முதல் 10 மணி வரையில் 4,60,496 பேர் தாக்கல் செய்தனர். அதன் பிறகு 10 மணி முதல் 11 மணி வரையில் 4,50,013 பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இதனால் மொத்தமாக நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 67.9 லட்சம் பேர் வருமான வரிக்கணக்குளை அபராதரத்தை தவிர்க்க தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Comment