நேபாளத்தில், இன்று 4.8 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இரட்டை நிலநடுக்கம்.!

நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஒரே இரவில் பதிவாகியுள்ளன.

நேபாளத்தில் பாஜுராவின் டஹாகோட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின் படி முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர் அளவிலும், அடுத்த நிலநடுக்கம் அதிகாலை 1:30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 5.9 ரிக்டர் அளவிலும் என பதிவாகியுள்ளதாக தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பஜுரா, தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு நேபாளத்தில் உள்ள பஜுராவை ஒட்டிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் சர்மா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.