கடந்த தேர்தலை விட 2023இல் மிக பெரிய வெற்றி பெற வேண்டும்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலை விட வரும் 2023இல் மிக பெரிய வெற்றியை பெற வேண்டும். – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

சென்னை : திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுக இளைஞர்கள் தங்களை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது நடப்பது அறிமுக கூட்டம் இல்லை. நான் உங்களை 2019 முதலே சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். 2019 ஜூலை மாதம் நான் இளைஞரணி பொறுப்பில் பதவியேற்றது முதல் உங்களை சந்தித்து வருகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளிடம் பேசினார்.

மேலும், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலை விட வரும் 2023இல் மிக பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மேலும், மத்திய அமைச்சர் அமித்ஷா பற்றி அமைச்சர் உதயநிதி பேசுகையில், நேற்று அமித்ஷா தமிழகம் வந்து என்னை பற்றி பேசியுள்ளார். என்னை முதல்வராக்குவது தான் நமது முதல்வரின் ஆசை என பேசியுள்ளார். நான், மக்களை நேரடியாக சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு அதில் வென்று, எம்எல்ஏவாக ஜெயித்து  அதன் பின்னர் அமைச்சரானேன் என குறிப்பிட்டார்.

மேலும், உங்கள் உங்கள் மகன் ஜெய் ஷா எப்படி இந்திய கிரிக்கெட் சங்க தலைவரானார்.? அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளார். எத்தனை ரன்கள் எடுத்துள்ளார் என கூறுங்கள் என அமித்ஷா கருத்துக்கு பதில் கூறினார்.

அடுத்ததாக, ஜெய்ஷா நடத்தும் நிறுவனம் பாஜக ஆட்சிக்கு முன்னர் 75 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் மதிப்பு 130 கோடி ரூபாயாக உள்ளது அது எப்படி என்று கூறுங்கள் எனவும் விமர்சித்து இருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இறுதியாக, வரும் டிசம்பர் மாதம் சேலத்தில் மிக பெரிய இளைஞர் மாநாடு நடத்த தலைவர் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) அனுமதி கொடுத்துள்ளார் என கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.