இந்தியா கூட்டணி சார்பாக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்தியா கூட்டணியில் தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின், சரத்பவார் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை ‘இந்தியா’ கூட்டணி நிறைவேற்றியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இயன்றவரை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவோம்.
  • தொகுதி பங்கீடுகள் பொருத்தவரை அதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட்டு கூடிய விரைவில் முடிக்கப்படும். மாநில தொகுதி பங்கிடு உடனடியாக தொடங்கப்படும்.
  • பொதுமக்கள் மீதான அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தொடர்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்தி எடுத்துரைக்க முடிவு.
  • தகவல் தொடர்பு மற்றும் ஊடக உத்திகள் மூலமாக பிரச்சாரங்களை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.