பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? – சு.வெங்கடேசன் எம்.பி

பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழிசை பேட்டி 

tamilisai soundharjan

அப்போது பேசிய அவர் தமிழக மக்கள் எங்களை போன்ற நிர்வாக திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு ஆளுநராக நியமித்துள்ளனர். எங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு கருதி எங்களை ஆளுநராக நியமித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்பி வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment