எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தால் அவர்கள் தான் பணம் தர வேண்டும் – சீமான்

என் வீட்டில் சோதனை செய்தால் வருமானவரி துறையினர் தான் எனக்கு பணம் தர வேண்டி இருக்கும் என சீமான் பேட்டி. 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் செங்கோல் குறித்து பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த போது நேரு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோல் வைப்பதால் தமிழர்களுக்கு என்ன பெருமை.  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே பாஜக தமிழை தூக்கி பிடிக்கிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது சரி தான் என தெரிவித்துள்ளார்.

மேலும், வருமான வரித்துறை சோதனை குறித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த விடாமல் அதிகாரிகளை திமுகவினர் தடுப்பது ஏன்? குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

வருமான வரி சோதனை என்பது கண் துடைப்பு நடவடிக்கை தான். எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது என சொல்லப்படுவதில்லை. விஜய் வீட்டிலும் 2 நாட்கள் வருமான வரி சோதனை நடந்தது, பிறகு ஏதும் இல்லை என்று தெரிவித்தனர். என் வீட்டில் சோதனை செய்தால் வருமானவரி துறையினர் தான் எனக்கு பணம் தர வேண்டி இருக்கும் என தெரிவித்துள்ளார்.