உண்மை தோற்பதில்லை என்பதற்கு ஐகோர்ட் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

உண்மை தோற்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என பேட்டி. 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மிலானி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஓ.பி.ரவீந்திரநாத் 2019 தேனி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது. இருந்தும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கையினை ஏற்று தீர்ப்பை ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

இதுகுறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் கூறுகையில், எதை செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள், ஆனால் முடிவில் இப்படிதான் தீர்ப்புகள் வரும், அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு வேண்டும்;
உண்மை தோற்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் முழு மனதோடு வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.