ஜெயலலிதாவுக்கு டெபாசிட் போச்சு.. ஆனாலும்..! பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த விளக்கம்.!

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தும் துணிந்து அடுத்த தேர்தலில் நின்று வென்று காட்டினார். அவரது பாதையில் நான் பயணிக்கிறேன் என்று தான் நான் கூறினேன்.  – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசி அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஜெயலலிதா போன்று நானும் ஒரு கட்சி தலைவர் தான். அவர் அளவுக்கு ஆளுமை இல்லையென்றாலும், மாநில கட்சியின் தலைவர் நான் என பேசியிருந்தார்.

அதிமுக எதிர்ப்பு :

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜெயலலிதா போல யாராலும் வாழ்ந்து காட்ட முடியாது என பேசியிருந்தனர். சில இடங்களில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டமும், புகைப்பட ஈர்ப்பு சம்பவங்களும் நடைபெற்றன.

மகளிர் தின நிகழ்ச்சி : தற்போது இது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். அவர் கோவை, சின்னியம்பாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டார். அப்போது 13 பெண்களுக்கு சாதனை பட்டத்தை வழங்கினார்.

ஜெயலலிதா டெபாசிட் :

அதன் பின்ன்ர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தும் துணிந்து அடுத்த தேர்தலில் நின்று வென்று காட்டினார். அவரது பாதையில் நான் பயணிக்கிறேன் என்று தான் நான் கூறினேன்.

அண்ணாமலை விளக்கம் :

என்னுடைய உவமை அப்படிப்பட்ட ஒன்று தான். என்னை நான் யாரிடமும் ஒப்பிடவில்லை. என்னுடைய தயார், ஜெயலலிதாவை விட  100 மடங்கு பவர்ஃபுல், என் மனைவி 1000 மடங்கு பவர்புல். தலைவராக இருப்பவர் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். என்ன வந்தாலும் அதனை எதிர்கொள்ள வேண்டும் என விளக்கம் கொடுத்தால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Leave a Comment