நான் ஓய்வை அறிவிக்கவில்லை…மேரி கோம் விளக்கம்..!

ஆறு முறை உலக சாம்பியனும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவித்ததாக சில ஊடகங்கள் தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்று மேரி கோம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து குத்துச்சண்டை சாம்பியனான மேரி கோம் கூறுகையில், “நான் இன்னும் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. எனது கருத்து தவறான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை அறிவிக்க வேண்டிய போது நானே ஊடகங்கள் முன் வருவேன். நான் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தேன், அது உண்மையல்ல.

IndvsEng : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

நேற்று திப்ருகாரில் நடந்த ஒரு பள்ளி நிகழ்வில் நான் கலந்து கொண்டேன், அதில் நான் குழந்தைகளை ஊக்கப்படுத்தினேன், எனக்கு இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற பசி உள்ளது, ஆனால் ஒலிம்பிக்கில் வயது வரம்பு என்னை பங்கேற்க அனுமதிக்கவில்லை. தனது உடற்தகுதியில் தான் இன்னும் கவனம் செலுத்தி வருவதாகவும், எப்போது ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அனைவருக்கும் அறிவிப்பேன்” என்றும் கூறினார்.

40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.