அமைச்சராக இருக்கும்போது செந்தில் பாலாஜி எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பார் – ஜெயக்குமார்

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என ஜெயக்குமார் கருத்து. 

சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி?

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும்: பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும்.

இன்றைய முதல்வர் அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஒரு நிலையில் இருந்தார், தற்போது ஒரு நிலையில் இருக்கிறார்; அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது, திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.