காந்தியை கொன்றவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுப்பார்கள்.? பிரகாஷ் ராஜ் காட்டம்.!

அண்மையில் 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதில் சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு அறிவிக்கபட்டது. சிறந்த நடிகையாக பாலிவுட் நடிகை அலியா பட் கங்குபாய் படத்திற்காக அறிவிக்கப்பட்டது.

ரிலீஸ் சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்க்கு விருது அளிக்கப்பட்டு இருந்தது. தமிழில், சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு, பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருது அறிவிக்கப்படவில்லை.

இதனால் தேசிய விருது அறிவிக்கப்பட்டது முதல் பலரும் அதனை பற்றி விமர்சித்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தேசிய விருது  அறிவிப்புகள் குறித்து விமர்சித்து உள்ளார்.

அதில், மகாத்மா காந்தியை கொன்றவர்கள், அண்ணல் அம்பேத்கரின் தத்துவத்தை அளிக்க நினைப்பவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது வழங்குவார்கள் என கட்டமாக தனது அதிருப்தியை X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.