உங்கள் அன்புக்குரிய செல்லப் பிராணிகளை கோடை காலத்தில் பராமரிப்பது எப்படி?

Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை:

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மனிதர்களாகிய நாம் நம்மை தற்காத்துக் கொள்ள இளநீர், சர்பத் ,ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடி செல்கிறோம். ஆனால் நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளின் கஷ்டத்தை நாம் யோசிப்பதே இல்லை.

வெயில் காலத்தில் நம் வீட்டில் வசிக்கும் செல்ல பிராணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோடை காலத்தில் ஏற்படும்  ஹீட் ஸ்ட்ரோக் மனிதர்களை மட்டும் தாக்குவதில்லை, செல்லப் பிராணிகளை கூட தாக்குகிறது. இதனால் உயிர் போகும் நிலை கூட ஏற்படுகிறது என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர் .

நாய்கள் வசிக்கும் இடங்கள் குளுமையானதாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக வைக்க வேண்டும். சிமெண்ட் சீட் போன்ற வெக்கை நிறைந்த பகுதிகளில் அவர்களை நிறுத்தி வைக்க கூடாது. வெப்பம் அதிகரித்து ஹீட்  ஸ்ட்ரோக்கை ஏற்படுத்தும்.

ஹீட் ஸ்ட்ரோக் வருவதற்கான முன் அறிகுறி:

ஸ்ட்ரோக் வருவதற்கு முன்பே சில அறிகுறிகளை நாய்கள் வெளிப்படுத்தும். அதிகமாக இளைப்பு மற்றும் அதிக சோர்வுடன்  காணப்படுவது, சுய நினைவின்றி இருப்பது போன்றவற்றை வெளிப்படுத்தும்.

இந்த சூழ்நிலையில் தண்ணீர் கொடுக்கக் கூடாது .மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பு ஒரு ஈரத்துணியால் அல்லது நூல் சாக்கை நனைத்து அவர்கள் மீது மூடி கொண்டு செல்ல வேண்டும்.

கோடை காலத்தில் கொடுக்கக்கூடிய உணவுகள்:

கோடை காலங்களில் காலை 9:00 மணிக்குள் உணவுகளை கொடுக்க வேண்டும். அதன் பிறகு வெயில் தணிந்த பிறகு தான் உணவு கொடுக்க வேண்டும். நல்லெண்ணையை அடிக்கடி உணவுடன் சேர்ந்து கலந்து கொடுக்க வேண்டும்.

பால் கொடுப்பதை தவிர்த்து விட்டு தயிரை அடிக்கடி உணவில் கலந்து கொடுக்க வேண்டும். வெள்ளரிக்காய் ,கற்றாழை ஜெல் போன்றவற்றையும் கொடுக்கலாம். இதை சிறிய பப்பிஸ்க்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அடல்ட்[adult] நாய்களுக்கு கொடுக்கலாம்.

மேலும் கோழி  இறைச்சி மற்றும் மட்டன் இறைச்சியின் கழிவுகளை  கோடை காலங்களில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இனிப்பு சுவை நிறைந்த உணவுகள், கேக்குகள் போன்றவற்றை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் .எப்போதாவது கொடுத்து கொள்ளலாம்.

குளிக்க வைக்கும் போது குறைந்தபட்சம் அரை மணி நேரம் ஆவது குளிக்க வைக்க வேண்டும் .மேலும் காது ,கை ,கால் இடையில் பேன்கள்  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே இந்த கோடையில் இருந்து உங்கள் செல்லப்பிராணியின் உடல் நலனில் சிறிது அக்கறை செலுத்துங்கள்.