கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் காற்றின் வேகமானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரையோரம், மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியில் நிலவும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.