ஹேமந்த் சோரனுக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

பணமோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்த நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைதாவற்கு முன்னர் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

டெல்லி பாஜக அலுவலகம் முன்னர் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்.! 25 பேர் கைது.!

இதனிடையே ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஹேமந்த் சோரனை 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

Leave a Comment