ஹெட் மற்றும் ஸ்மித் அபார ஆட்டம்..! முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவிப்பு.!

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 327/3 ரன்கள் குவிப்பு.

இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கவாஜா டக் அவுட் ஆகி வெளியேற, அதன் பின் வார்னர் 43 ரன்கள் மற்றும் லபஸ்சன் 26 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

காலை உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை இழந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு, விக்கெட்டை பறி கொடுக்காமல் ஹெட் சதம் அடித்தும் ஸ்மித் அரைசதம் அடித்தும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்திய அணி பவுலர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறினர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ட்ராவல்ஸ் ஹெட் அபாரமாக விளையாடி தனது ஆறாவது சதத்தை நிறைவு செய்தார். ஸ்மித் அவருக்கு துணையாக நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். இருவரும் இணைந்து 251 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. களத்தில் ஹெட் 146* ரன்களுடனும், ஸ்மித் 95* ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.