வார தொடக்க நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம்-இறக்கம் கண்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்க விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.5,555-க்கும், ஒரு சவரண் ரூ. 44,440-க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.78.30-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.