கண் பரிசோதனை செய்ய புதிய வடிவில் வந்த வெப்சைட்..!

 

நாம் ஆன்லைனில் கண்ணாடிகளை வாங்குவதன் மூலம் கொஞ்சம் பணத்தையும், அதிக நேரத்தையும் சேமிக்க முடியும் என தெரியுமா? கண் சிமிட்டல்களில் உங்களது பரிசோதனை அறிக்கை தயாராகி விடும் சூழலில் இதற்கென மருத்துவரை சந்தித்து, பின் அவரிடம் கண்ணாடிகளை வாங்காமல் வெறும் அறிக்கையுடன் அங்கிருந்து வெளியேறுவது பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

Related imageஇவ்வாறானவர்களுக்கு என்றே GlassesUSA.com போன்ற வலைத்தளங்கள் இயங்கி வருகின்றன. இவை உங்களது தற்போதைய கணணாடிகளை ஸ்கேன் செய்து அதற்கு மாற்றான புதிய கண்ணாடிகளுக்கு தேவையான அறிக்கையை தயார் செய்து விடுகின்றன.

Image result for GlassesUSA eye scanGlassesUSA.com வலைத்தளம் வழங்கும் முடிவுகள் கச்சிதமாக இருந்தாலும் உங்களது கண்களை ஒரு வருடத்திற்கும் மேல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவில்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தற்சமயத்திற்கு எளிமையாகவும், வேகமாகவும் புதிய கண்ணாடிகள் வேண்டும் என்போர் தொடர்ந்து வழங்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

  1. Image result for GlassesUSA eye scanஉங்களின் தற்போதைய கண்ணாடி, மொபைல் போன் மற்றும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் அமர்ந்து www.glassesusa.com/scan வலைத்தளம் செல்ல வேண்டும்.
  2. உங்களது மொபைல் போன் நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ததும் GlassesUSA செயலிக்கான லின்க் உங்களுக்கு அனுப்பப்படும். வழிமுறை
  3. செயலியை இன்ஸ்டால் செய்ததும் அதில் வழங்கப்பட்டு இருக்கும் டுடோரியலை பின்பற்றலாம்.

முதலில் ஆன்ஸ்கிரீன் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும், பின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டினை திரையில் காண்பித்து ஸ்கேன் செய்ய வேண்டும். இனி உங்களது கண்ணாடியை மொபைல் போன் மற்றும் திரையின் இடையே காண்பித்து பல்வேறு குறியீடுகளை பெற வேண்டும்.

Image result for GlassesUSA eye scanஇது பியூப்பல்ரி-டிஸ்டன்ஸ் ஸ்கேனுடன் நிறைவுறும். இதைத் தொடர்ந்து கார்டினை நெற்றியில் வைக்க வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் உங்களுக்கான பரிசோதனை அறிக்கை வலைத்தளத்தில் தெரியும். இந்த மொத்த வழிமுறையும் அதிகபட்சம் 10 முதல் நிமிடங்களில் நிறைவுறும். இனி GlassesUSA.com வலைத்தளத்தில் அக்கவுன்ட் உருவாக்க உங்களிடம் அனுமதி கோரப்படும், அந்த நேரத்தில் உங்களது அறிக்கையை பார்க்க முடியும்.

Leave a Comment