காம்பியாவின் துணை ஜனாதிபதி ஜூஃப், இந்தியாவில் காலமானார்.!

காம்பியாவின் துணை ஜனாதிபதி, பதாரா அலியூ ஜூஃப் இந்தியாவில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவின் துணை ஜனாதிபதி பதாரா அலியூ ஜூஃப், இந்தியாவில் உடல்நலக்குறைவால் காலமானார் என்று ஜனாதிபதி ஆடாமா பாரோ தெரிவித்தார். 65 வயதான ஜூஃப், 2022 இல் காம்பியாவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு காம்பியாவின் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

அதிபர் பாரோ, தனது ட்விட்டரில் குறுகிய கால நோய்க்குப் பிறகு ஜூஃப், இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார், மேற்கொண்டு எந்தவித விவரங்களும் வழங்கப்படவில்லை. துணை ஜனாதிபதி ஜூஃப், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு காம்பியாவை விட்டு வெளியேறிச்சென்றார்.

Leave a Comment