சாம்சங் பட்ஸில் Galaxy AI அம்சங்கள்.. ஆனா இது கட்டாயம்!

சாம்சங் தனது பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் எஃப்இ ஆகியவை கேலக்ஸி எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கும்போது செயற்கை நுண்ணறிவு (Galaxy AI) தொழில்நுட்பம் மூலம் நேரடி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுவந்துள்ளது.

சாம்சங்கின் Galaxy AI அம்சங்கள் இப்போது அந்த நிறுவனத்தின் பல சாதனங்களில் வர தொடங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி பட்ஸ் 2, பட்ஸ் 2 ப்ரோ மற்றும் பட்ஸ் எஃப்இ ஆகியவற்றிற்கு மென்பொருள் புதுப்பிப்பை வழங்கியுள்ளது. இது Galaxy AI அம்சம் நேரடி மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.

170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கிய கூகுள்

இந்த மென்பொருள் புதுப்பிப்பு தற்போது இந்தியாவிலும், சில மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. இந்த அம்சங்களைப் பயன்படுத்த, ஒருவர் Galaxy S24 சீரியஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க வேண்டும். இதன்பின் சமீபத்திய, ஃபார்ம்வேர் (firmware) மென்பொருள் அப்டேட் செய்தபிறகு, கேலக்ஸி பட்ஸை கொண்ட பயனர்கள், நேரடியாக பட்ஸில் சாம்சங் டயலர் மூலம் இயக்கப்படும் நேரடி அழைப்பு மொழிபெயர்ப்பை (live call translation) அனுபவிக்க முடியும்.

இந்த பட்ஸ்கள் மூலம் பயனர்கள் நேரடியாகப் பேசுவதற்கு, விளக்க கேட்பதற்குமான அம்சத்தை அனுமதிக்கிறது. இது மொழியின் தேர்வின்படி தானாகவே மறுமுனையில் மொழிபெயர்க்கப்படும். இந்த அம்சங்கள் செயல்பட இணைய இணைப்பு தேவையில்லை. இருப்பினும், ஒரு பயனர் Galaxy S24 சீரியஸ் ஸ்மார்ட்போன்களில் மொழி பேக்கை (language pack) பதிவிறக்க வேண்டும்.

இது Snapdragon 8 Gen 3 மற்றும் Exynos 2400 SoC-இன் ஆன் டிவைஸ் நியூரல் ப்ராசசிங் யூனிட்டைப் பயன்படுத்துகிறது. இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட 13 க்கும் மேற்பட்ட மொழிகளை வழங்குகிறது. எனவே, வரும் நாட்களில், இந்த அம்சங்கள் Galaxy S23 series, Galaxy Z Flip5 போன்ற மாடல் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment