G20 Summit : மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 உலக நாட்டு தலைவர்கள் மரியாதை.!

உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில், இந்தியா, 18வது ஜி20 உச்சி மாநாட்டை தலைமை தாங்கி தலைநகர் டெல்லியில் நேற்று  முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு இன்று இன்றும் தொடர்ந்து உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறுகிறது.

இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜி20 மாநாடு தலைவர்கள், அனைவரும் டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அப்போது மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் ஒலிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி20 நாடுகளின் தலைவர்கள் பிரகதி மைதானத்தில் மரம் நாட உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி ஜி20 நாட்டு தலைவர்கள் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.