தமிழ்நாட்டில் ஐபோன் 15 உற்பத்தியைத் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம்..!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள அதன் புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களை நிறுவனம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் அதன் 7% ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்தது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதியை சமநிலைக்கு கொண்டு வருவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தமானது ரூ.1600 கோடி முதலீட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.