‘எங்களை பொறுத்தவரையில் எல்லாம் நன்மைக்கே’ – ஓபிஎஸ்

எங்களை பொறுத்தவரையில் எல்லாம் நன்மைக்கே என ஓபிஎஸ் பேட்டி. 

கடந்த 29-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு  இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் அதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மூன்று நாட்களுக்குள் தேர்தல் ஆணையமும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பதில் அளிக்க கோரி பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு விசாரணையை  ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஓபிஎஸ் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு அளித்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத்தலைவரால் தேத்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

opsteamcandidate

 

இந்த உத்தரவு குறித்து சென்னையில் ஓபிஎஸ்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  எங்களை பொறுத்தவரையில் எல்லாம் நன்மைக்கே என ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு கிளம்பினார்.

Leave a Comment