மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதுபோன்று பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க ஆண்டிக்குப்பம் மீனவர்களுக்கு தடை விதித்து சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டுள்ளார். பழவேற்காடு அருகே ஆண்டிக்குப்பதில் நேற்று மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பு இடையே மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment