FIFA WorldCup2022: வேல்ஸ் அணியை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் அணி 2-0  என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வென்றது.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று குரூப்-B வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் அஹ்மது பின் அலி ஸ்டேடியத்தில் மோதின. 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் விளையாடி வந்தனர்.

இந்த போட்டியில் வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் வெய்ன் ஹெனஸி கத்தார் உலகக்கோப்பை 2022 இன் முதல் சிவப்பு அட்டையை வாங்கினார். கூடுதலாக வழங்கப்பட்ட 8ஆவது நிமிடத்தில் ஈரான் அணியின் செஸ்மி ஒரு கோல் அடிக்க, அடுத்த 3 நிமிடங்களுக்குள் ராமின் ரெசியன் இன்னொரு கோல் அடிக்க ஈரான் அணி ஆட்டநேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.

Leave a Comment