மாதவரம் டூ சோழிங்கநல்லூர்.! சென்னை மெட்ரோவின் 3-வது வழித்தடத்திற்கு ஒப்புதல்.!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் பணியில் மூன்றாவது வழித்தடத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல். 

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் கிண்டி கத்திப்பாரா அருகே பட்ரோடு பகுதியில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பட உள்ளது. இதில் மூன்றாவது வழித்தடமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் 47 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வழித்தடமும் ஒன்றாகும்.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் பணியில் மூன்றாவது வழித்தடமான மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்திற்கு தற்போது சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி வழங்க கோரி சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், பக்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment