இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பென் ஸ்டோக்ஸ்

நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இன்னும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாக் அவுட் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. நவ-10 இல் அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது, இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி பலமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இருந்தும் நாங்கள் அரையிறுதிக்குள் இருக்கிறோம்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், பயிற்சியில் திரும்ப திரும்ப அதே முறையைத்தான் செய்து வருகிறோம், போட்டியில் வெல்வதற்கு என்ன தேவையோ அதை செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அடிலெய்டு மைதானம் மற்ற மைதானங்களை காட்டிலும் அளவுகளில் சற்று வித்தியாசமானது, நீளமான பௌண்டரி, இது எங்களுக்கு சவாலாக இருக்கும், அந்த சவாலை எங்களுக்கு சாதகமாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்வோம். நாக் அவுட் மாதிரியான பெரிய போட்டிகளில் இருக்கும் அழுத்தத்தை சமாளிக்க நான் அவ்வப்போது ஸ்கோர் போர்டை பார்த்து நிலைமையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள முயற்சிப்பேன்.

இந்தியா போன்ற வலிமையான அணியை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம், எதிரணி குறித்து பெரிதாக நாங்கள் யோசிக்க மாட்டோம், எங்கள் அணி பற்றி தான் அதிகம் யோசிப்போம். இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி குறித்து எல்லாரும் பெரிதாக பேசுகிறார்கள், அது சிறப்பான ஒன்றுதான் இருந்தாலும் உண்மையை சொல்லவேண்டுமானால் நாங்கள் இங்கு உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம், மற்றதெல்லாம் எனக்கு தெரியாது என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

டேவிட் மலான், உடல்நிலை குறித்து தற்போது எந்த தகவலும் என்னிடம் இல்லை. அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இங்கிலாந்து அணி அடிலெய்டில் இந்தியாவை சந்திக்கிறது. நாக் அவுட் போட்டிகளில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதுகிறது.

கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

16 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

19 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

19 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

47 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago