விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த இங்கிலாந்து ..!

T20WC சூப்பர் 8: நடைபெற்று கொண்டிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது.

20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றானது நேற்று இரவு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில், 2-ஆம் பிரிவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது செயின்ட் லூசியாவில் டேரன் சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து  வீச்சை தேர்வு செய்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சற்று அதிரடியுடன் தொடங்கியது. விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.

இங்கிலாந்து அணியும்  நன்றாகவே பந்து வீசியதால் ஓரளவுக்கு ஸ்கோர் உயராமல் பார்த்து கொண்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இலக்கை எட்டுவதற்கு களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்கத்தில் களமிறங்கிய ஃபில் சால்ட் வானவேடிக்கை காட்டினார்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஃபில் சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 என்ற இலக்கை எட்டி வெற்றி 8 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது இங்கிலாந்து. அதிரடியாக விளையாடிய  ஃபில் சால்ட் 87* ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு உறுதுணையாக நின்று அணியை வெற்றி பெற செய்தார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

3 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

5 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

5 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

5 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

5 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

5 hours ago