,

இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம்..! 6.0 ரிக்டர் அளவில் பதிவு..!

By

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

   
   

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவி இயற்பியல் நிறுவனமான பிஎம்கேஜி தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ரிக்டர் அளவில் பதியாகிய இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக புவி இயற்பியல் நிறுவனம் கூறியது.

இந்த வார தொடக்கத்தில் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை பிஎம்கேஜி தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023