நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 – அமைச்சர் மனோ தங்கராஜ்

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேரவையில் அறிவித்தார்

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழிநுட்பத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்படி, 2022-23-ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும், உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” எனும் புதிய மாநில இணையதளம் உருவாக்கப்பட்டு தற்போது உள்ள மாநில இணையதளம், புதிய இணையத் தளத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.