ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! கால தாமதம்.. வாக்காளர்சல் சாலை மறியல்.!

வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தாலும், முதியோர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்ததாலும் கருங்கல்பாளையம் வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இடைதேர்த்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் , பிற கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

அதிக வேட்பாளர்கள் : 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 5 தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தமாக 238 வாக்கு சாவடிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் 33 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அதற்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல் : இந்நிலையில் தற்போது கருங்கல்பாளையம் வாக்குசாவடி எண் 148இல் வாக்களிக்க கால தாமதம் ஆவதாகவும், முதியோர்கள் அதிக நேரம் காத்திருந்தும் வாக்களிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறி அங்கு 20க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் சமாதானம் : இதனால் அந்த வாக்குசாவடி பரபரப்பாக காணப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி மீண்டும் வாக்குப்பதிவு அங்கு தொடங்கப்பட்டது.

Leave a Comment